ADDED : மார் 11, 2026 06:13 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்காக வந்துள்ள துணை ராணுவ வீரர்களின் அணிவகுப்பை எஸ்.பி., கண்ணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
மாவட்ட மைய நுாலகத்தில் இருந்து துவங்கிய அணி வகுப்பு மீனாம்பிகை பங்களா, உழவர் சந்தை, மதுரை ரோட்டில் உள்ள சர்ச், தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக கே.வி.எஸ்., நடுநிலைப்பள்ளியில் நிறை வடைந்தது.
இதில் டி.எஸ்.பி.,க்கள் யோகேஷ்குமார், உதய சூரியன், கல்பனா, பயிற்சி டி.எஸ்.பி., ஆதித்யன், விருதுநகர் உட்கோட்டத்தின் இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
