/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கண்மாய்கரை ரோட்டில் வாகனங்கள் நிறுத்த தடை
/
கண்மாய்கரை ரோட்டில் வாகனங்கள் நிறுத்த தடை
ADDED : ஜூன் 15, 2025 11:57 PM
சிவகாசி:தினமலர் செய்தி எதிரொலியாக சிவகாசி சிறுகுளம் கண்மாய்க்கரையில் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதித்த போலீசார் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில் இருப்பதால் அதிக அளவில் கனரக வாகனங்கள் வருகின்றன. சிவகாசிக்கு மூலப் பொருட்களை கொண்டு வருவதற்கும் உற்பத்தி பொருட்களைக் கொண்டு செல்வதற்காக தினமும் 200க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.
நகருக்கு சரக்குகள் ஏற்றி வருகின்ற கனரக வாகனங்கள் அனைத்தும் சிறுகுளம் கண்மாய்க்கரை ரோட்டில் ஒரு கிலோ மீட்டர் துாரத்திற்கு அடுத்தடுத்து நிறுத்தப் படுகின்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பதோடு விபத்திற்கும் வழி ஏற்பட்டது.
மேலும் டூவீலரில் செல்பவர்கள் அச்சத்துடனே செல்ல வேண்டியிருந்தது. எனவே சிறுகுளம் கண்மாய் கரையில் கனரக வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக போலீசார் இப்பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதித்ததோடு, மீறி நிறுத்தினால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு செய்துள்ளனர்.