/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடி சுள்ளங்குடியில் பகுதி நேர ரேஷன் கடை
/
நரிக்குடி சுள்ளங்குடியில் பகுதி நேர ரேஷன் கடை
ADDED : ஜன 17, 2025 04:51 AM
நரிக்குடி: நரிக்குடி சுள்ளங்குடியில் பகுதி நேர ரேஷன் கடை ஏற்படுத்த வேண்டும் என அக்கிராமத்தினர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
நரிக்குடி சுள்ளங்குடியில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதில் 137 ரேஷன் அட்டைகள் உள்ளன. ரேஷன் பொருட்கள் வாங்க 3 கி.மீ., தூரம் உள்ள நல்லுக்குறிச்சிக்கு செல்ல வேண்டும்.
போக்குவரத்து வசதி இல்லாததால், கண்மாய் வழியாக குறுக்கு பாதையில் நடந்த சென்று வர வேண்டும். மழைக்காலங்களில் கண்மாயில் தண்ணீர் நிரம்பினால், 5 கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டும். நடந்து சென்று வாங்க முடியாது பலர் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதையடுத்து தற்காலிக ரேஷன் கடை அமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டார். இதுவரை பகுதி நேர ரேஷன் கடை ஏற்படுத்தவில்லை. மக்கள்கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பகுதி நேர ரேஷன் கடைகளுக்கு தேவையான எலக்ட்ரானிக் தராசு, டேபிள் வாங்கி வைத்துள்ளனர். விரைந்து பகுதி நேர ரேஷன் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.