பிளக்ஸ் பேனர்கள் வைத்து யுத்தம் நடத்தும் கட்சிகள்
பிளக்ஸ் பேனர்கள் வைத்து யுத்தம் நடத்தும் கட்சிகள்
ADDED : பிப் 18, 2026 07:46 AM
அருப்புக்கோட்டை: பிப். 18- -: அருப்புக்கோட்டையில் நகரின் வியாபார பகுதிகளில் கட்சிகள் பிளக்ஸ் பேனர்கள் வைத்து மறைப்பதால் வியாபாரம் பாதிப்படைவதாக வியாபாரிகள் புலம்புகின்றனர்.
அருப்புக்கோட்டையில் மெயின் பஜார் சந்திப்பு, அண்ணாதுரை சிலை பகுதி, பந்தல்குடி ரோடு சந்திப்பு சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகள் ஆகும். இந்தப் பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வர்.
இந்தப் பகுதிகளில் கட்சிகள் தங்கள் நிகழ்ச்சிகளை மெகா பிளக்ஸ் பேனர் வைத்து கடைகள் முழுவதையும் மறைக்கின்றனர். நிகழ்ச்சிக்கு 1 மாதம், 20 நாட்களுக்கு முன்பே, பேனர்களை வைத்து விடுகின்றனர்.
நிகழ்ச்சி முடிந்து பல நாட்கள் ஆனாலும் பேனர்களை எடுப்பதில்லை. ஒரு வழியாக எடுத்து முடித்த பின், மற்றொரு கட்சியினர் பேனர்களை வைப்பதால் வியாபாரம் தொடர்ந்து பாதிப்பதாக வியாபாரிகள் புலம்புகின்றனர்.
பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது என ஹைகோர்ட் உத்தர விட்டும் நகராட்சி நிர்வாகம் எதையும் கண்டு கொள்வது இல்லை. பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு அனுமதியும் பெறுவது இல்லை. ஆளும் கட்சி பேனர்கள் என்பதால் நகர அமைப்பு பிரிவு கண்டும் காணாமல் உள்ளது.
நகரின் வியாபார பகுதிகள் முக்கிய சந்திப்புகளில் மெகா பிளக்ஸ் பேனர்களை வைக்கும் கட்சிகளின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பிட்ட நாட்களில் பேனர்கள் வைத்து எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்த வேண்டும்.
