/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சென்டர் மீடியனில் ஏறி நின்ற அரசு பஸ் காயமின்றி தப்பிய பயணிகள்
/
சென்டர் மீடியனில் ஏறி நின்ற அரசு பஸ் காயமின்றி தப்பிய பயணிகள்
சென்டர் மீடியனில் ஏறி நின்ற அரசு பஸ் காயமின்றி தப்பிய பயணிகள்
சென்டர் மீடியனில் ஏறி நின்ற அரசு பஸ் காயமின்றி தப்பிய பயணிகள்
ADDED : ஜன 06, 2024 05:24 AM

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜனவரி 6
ஸ்ரீவில்லிபுத்தூர் திருப்பாற்கடல் வளைவில் உள்ள சென்டர் மீடியனில் திருப்பூரில் இருந்து ராஜபாளையம் சென்ற அரசு பஸ் மோதி ஏறி நின்ற சம்பவத்தில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்- ராஜபாளையம் ரோட்டில் திருப்பாற்கடல் வளைவு மற்றும் ஆண்டாள் தியேட்டர் வளைவு பகுதிகளில் உள்ள சென்டர் மீடியனில் அடிக்கடி வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி வருகிறது. நேற்று அதிகாலை 4: 40 மணிக்கு திருப்பூரில் இருந்து ராஜபாளையம் வந்த அரசு பஸ், சென்டர் மீது மோதி ஏறி நின்றது. பஸ்ஸில் இருந்த பயணிகள் காயமின்றி தப்பினர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.