/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஸ் ஸ்டாண்ட்களில் குடிநீர் தொட்டி அமைக்க பயணிகள் எதிர்பார்ப்பு
/
பஸ் ஸ்டாண்ட்களில் குடிநீர் தொட்டி அமைக்க பயணிகள் எதிர்பார்ப்பு
பஸ் ஸ்டாண்ட்களில் குடிநீர் தொட்டி அமைக்க பயணிகள் எதிர்பார்ப்பு
பஸ் ஸ்டாண்ட்களில் குடிநீர் தொட்டி அமைக்க பயணிகள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 19, 2024 05:37 AM
நரிக்குடி : கோடை வெயில் கடுமையாக இருப்பதால் பயணிகள் குடிநீருக்காக அங்குமிங்கும் அலைவதால் பஸ் ஸ்டாண்ட்களில் குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
கோடை வெயில் இப்போதே வாட்டி வதைக்கிறது. மக்கள் வெளியில் தலை காட்ட முடியவில்லை. வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் உடல் சோர்வடைகின்றனர். நரிக்குடி, காரியாபட்டி பஸ் ஸ்டாண்டுகளில் பயணிகள் நிழலுக்கு ஒதுங்கி நிற்க இடம் வசதி இல்லை. கடை ஓரங்களில் ஒதுங்கி நிற்கின்றனர். ஒரு சில கடைக்காரர்கள் வியாபாரம் பாதிப்பதாக கருதி முகம் சுளிக்கின்றனர்.
ஒரு வழியாக ஒதுங்கி நின்றாலும், வெயிலின் தாக்கத்தால் பலர் உடல் சோர்வடைந்து தண்ணீர் தாகம் எடுத்து தவியாய் தவிக்கின்றனர். பஸ் ஸ்டாண்ட்களில் குடிநீர் வசதி கிடையாது. தாகத்தை தணிக்க குடிநீருக்காக அங்குமிங்கும் அலைகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க குடிநீர் தொட்டி அமைத்து பாதுகாப்பான குடிநீர் வழங்க, உள்ளாட்சி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

