/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டிற்குள் அரசு பைபாஸ் ரைடர்கள் வர வேண்டும்; பயணிகள் எதிர்பார்ப்பு
/
விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டிற்குள் அரசு பைபாஸ் ரைடர்கள் வர வேண்டும்; பயணிகள் எதிர்பார்ப்பு
விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டிற்குள் அரசு பைபாஸ் ரைடர்கள் வர வேண்டும்; பயணிகள் எதிர்பார்ப்பு
விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டிற்குள் அரசு பைபாஸ் ரைடர்கள் வர வேண்டும்; பயணிகள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 20, 2024 06:11 AM
விருதுநகர் : விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டிற்குள் திருநெல்வேலி, நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு செல்லும் அரசு பைபாஸ் ரைடர் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த சில நாட்கள் மட்டுமே மதுரையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் செல்லும் அரசு பைபாஸ் ரைடர் பஸ்கள் உள்ளே வந்து சென்றது. அதன் பின் பஸ்களின் வருகை குறைந்து தற்போது பைபாஸ் ரைடர் பஸ்கள் உள்ளே வந்து செல்வதில்லை.
இதனால் திருநெல்வேலி, நாகர்கோவிலில் இருந்து விருதுநகருக்கு வரும் பயணிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இறக்கி விடப்படுகின்றனர். விருதுநகரில் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு பணியாளர்கள், சிகிச்சை பெறுபவர்கள், அலுவல் ரீதியாக பலரும் வந்து செல்கின்றனர்.
இப்படி வருபவர்கள் அரசு பைபாஸ் ரைடர்களில் வந்து இறங்கி நகருக்குள் செல்ல மற்றொரு பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய நிலையே தொடர்கிறது. இவற்றில் இரவில் வந்து இறங்கினால் விருதுநகருக்குள் செல்ல பஸ்கள் இன்றி பரிதவிக்க வேண்டிய நிலைக்கு பயணிகள் ஆளாகியுள்ளனர். கோவில்பட்டி, சாத்துார் பகுதிகளில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் மட்டுமே விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்கின்றன.
ஆனால் அரசு பைபாஸ் ரைடர் பஸ்களும் புது பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து சென்றால் மட்டுமே முழுமையான பயன்பாட்டிற்கு வரும். மேலும் விருதுநகரில் இருந்து வெளி மாவட்டங்கள் செல்லும் பயணிகள் எல்லா நேரமும் சிரமமின்றி சென்று வர முடியும்.
எனவே திருநெல்வேலி, நாகர்கோவிலில் இருந்து விருதுநகர் நான்குவழிச்சாலை வழியாக மதுரைக்கு செல்லும் அரசு பைபாஸ் ரைடர் பஸ்களை விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.