/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருளில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அவதியில் பயணிகள்
/
இருளில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அவதியில் பயணிகள்
ADDED : செப் 08, 2025 06:07 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகராட்சியின் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் 2 நாட்களாக இருளில் மூழ்கி இருப்பதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டையில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் இடித்து விட்டு புதியதாக கட்டும் பணி 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. புதிய பஸ் ஸ்டாண்டிற்கு அருகிலேயே தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது.
இதில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டு வந்த நிலையில், மதுரையில் ரோட்டில் நெசவாளர் காலனிக்கு எதிரே 3 மாதங்களுக்கு முன்பு தற்காலிக பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் செய்யப்பட்டது.
இங்கும் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. மழையிலும், வெயிலிலும் நின்று தான் பயணிகள் பஸ் ஏறுகின்றனர்.
இங்கு மொபைல் டாய்லெட் வசதி உள்ளது. அடிக்கடி தண்ணீர் தீர்ந்து விடுவதால், டாய்லெட் செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
2 நாட்களாக பஸ் ஸ்டாண்ட் முழுவதும் மின்விளக்குகள் எரியாமல் இருட்டாகவே உள்ளது.
மேலும் இந்த பஸ் ஸ்டாண்டிற்குள் அரசு பஸ்கள் இரவு நேரங்களில் வந்து செல்வதில்லை.
அமுதலிங்கேஸ்வரர் கோயில் சந்திப்பு அருகிலேயே இரவு நேரங்களில் பயணிகளை இறக்கி விட்டு பஸ் டிப்போவிற்கு சென்று விடுகிறது. இதனால் தற்காலிக பஸ் ஸ்டாண்ட்டிற்கு செல்லும் மக்கள் நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய நிலையில் உள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் இது குறித்து புதிய பஸ் ஸ்டாண்டில் கட்டடப் பணிகளை விரைவில் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், தற்காலிக பஸ் ஸ்டாண்டில் தேவையான வசதிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.