ADDED : செப் 11, 2026 04:41 PM
அருப்புக்கோட்டை, செப். 12 -
அருப்புக்கோட்டை அகம்படியர் பஸ் ஸ்டாப்பில் பயணிகள் உட்கார இருக்கை வசதி இல்லாததால், வாகனங்கள் நிற்கும் இடமாக மாறியதில் பயணிகள் நின்று கொண்டே பஸ் ஏற வேண்டியுள்ளது.
அருப்புக்கோட்டை மெயின் பஜார் வழியாக, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் வந்து செல்லும் முக்கியமான இடம். இங்குள்ள அகமடியர் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை கட்டப்பட்டு நவீன மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
பஸ் ஸ்டாப்பில் பயணிகள் உட்கார இருக்கை வசதி செய்யப்படாமலே உள்ளது. இதனால் அந்தப் பகுதி கடைக்காரர்கள் வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்றி விட்டனர். இதனால் பயணிகள் பல மணி நேரம் நின்று கொண்டு பஸ் ஏற வேண்டியுள்ளது. பெண்கள், வயதானவர்கள் சிரமப்படுகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் மக்கள் நலன் கருதி பயணிகளுக்கு இருக்கை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து போலீசார் பஸ் ஸ்டாப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகள் பாதுகாப்பாக நிற்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
----
