/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் பஸ் ஸ்டாண்டில் இருக்கை வசதியின்றி பயணிகள் அவதி
/
சாத்துார் பஸ் ஸ்டாண்டில் இருக்கை வசதியின்றி பயணிகள் அவதி
சாத்துார் பஸ் ஸ்டாண்டில் இருக்கை வசதியின்றி பயணிகள் அவதி
சாத்துார் பஸ் ஸ்டாண்டில் இருக்கை வசதியின்றி பயணிகள் அவதி
ADDED : ஏப் 21, 2025 05:25 AM
சாத்துார்: சாத்துார் பஸ் ஸ்டாண்டில் போதுமான இருக்கை வசதி இன்றி பயணிகள் அவதிப்படுகின்றனர்.
சாத்துார் அருகே கோட்டூர் குருசாமி கோயில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆகிய பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன.இந்த கோயில்களுக்கு தென்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
தென் பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் சாத்துார் வந்து இதன் பின்னர் கோட்டூருக்கும் இருக்கன்குடிக்கும் டவுன் பஸ்ஸில் செல்வது வழக்கம். இதன் காரணமாக செவ்வாய் வெள்ளி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சாத்துாரில் இருந்து சிறப்பு பஸ்கள் கோயில்களுக்கு இயக்கப்படுகிறது.
செவ்வாய் வெள்ளி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நிற்பதற்கு கூட இடவசதி இன்றி அவதிப்படும் நிலை உள்ளது.தற்போது பஸ் ஸ்டாண்டில் மூன்று சிமெண்ட் பெஞ்சுகளும் ஒரு சிமெண்ட் மேடை மட்டுமே பயணிகள் உட்காருவதற்காக உள்ளது.
பெரும்பாலான பயணிகள் பஸ் ஸ்டாண்ட் கூரை அமைந்துள்ள துாண்களில் உட்கார்ந்து காத்திருக்கும் நிலை உள்ளது. நீண்ட தொலைவில் இருந்து வரும் பயணிகள் இளைப்பாறுவதற்கு போதுமான இருக்கை வசதிகள் இல்லாத நிலையில் முதியவர்கள் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் கூடுதலாக தற்காலிக இருக்கை வசதிகளை செய்து தர வேண்டும்.

