தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வழிப்பறி 3 பேர் கைது

வழிப்பறி 3 பேர் கைது

வழிப்பறி 3 பேர் கைது


ADDED : செப் 25, 2026 09:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 09:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார், செப். 26-

சாத்துார் பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் மந்திரகுமார் 38. சில நாட்களுக்கு முன்பு டூ வீலரில் இரவு 10:30 மணிக்கு மடத்துப்பட்டி சென்று விட்டு ஊர் திரும்பியபோது அனுமன் நகரில் வைத்து மற்றொரு டூ வீலரில் வந்து வழிமறித்த 3 பேர் கம்பால் தாக்கி வெள்ளிப் பொருட்களையும், ரூ 48000 பறித்துச் சென்றனர்.

சி.சி.டி.வி பதிவுகளைக் கொண்டு போலீசார் விசாரித்து வந்தனர். போலீஸ் விசாரணையில் பனையடிப்பட்டியைச் சேர்ந்த சரவணன் 19. முனியசாமி 19. மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் வழிப்பறிசெய்தது தெரியவந்தது. அவர்களை நேற்று போலீசார் அருப்புக்கோட்டை அருகில் உள்ள காட்டுப் பகுதியில் கைது செய்தனர். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us