/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் முத்துராமலிங்கபுரத்தில் பேவர் பிளாக் ரோடு அமைப்பு
/
சாத்துார் முத்துராமலிங்கபுரத்தில் பேவர் பிளாக் ரோடு அமைப்பு
சாத்துார் முத்துராமலிங்கபுரத்தில் பேவர் பிளாக் ரோடு அமைப்பு
சாத்துார் முத்துராமலிங்கபுரத்தில் பேவர் பிளாக் ரோடு அமைப்பு
ADDED : செப் 22, 2024 05:38 AM

சாத்துார், : சாத்துார் முத்துராமலிங்கபுரத்தில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டது.
சாத்துார் ஊராட்சி ஒன்றியம் படந்தால் ஊராட்சிக்குட்பட்ட முத்துராமலிங்கபுரத்தில் ரோடு ,வாறுகால் வசதியின்றி மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் ரோடு கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகவும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் கரடு முரடாகவும் காணப்பட்டது.
இது வழியாக படந்தால் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் ,தீப்பெட்டி ஆலைக்கு வேலை செல்லும் தொழிலாளர்கள் , வாகனர ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர் . இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது .இதனைத் தொடர்ந்து தற்போது பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டு உள்ளது.