தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அன்பு நகரில் பேவர் பிளாக் பதிக்கும் பணி மும்முரம்

 அன்பு நகரில் பேவர் பிளாக் பதிக்கும் பணி மும்முரம்

 அன்பு நகரில் பேவர் பிளாக் பதிக்கும் பணி மும்முரம்


ADDED : ஜன 29, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்ததால் அன்பு நகரில் தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் 10 மாதங்களுக்கு மேலாக முதற்கட்டமாக நடந்து வருகிறது. இதில் அன்பு நகரில் உள்ள 1 முதல் 10 தெருக்களில் நடந்த பாதாள சாக்கடை திட்ட பணிகளால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாயினர். தெருவில் உள்ள ரோடுகள் குண்டும் குழியுமாகவும் இருந்தன. தெருவில் நடக்க முடியவில்லை. மழைக்காலத்தில் சேறும் சகதியும் ஆகி அவதிப்பட்டனர்.

இந்நிலையில், பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்ததால் இரண்டு நாட்களாக தெருக்களில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். விரைவாக கற்களை பதித்து தெருக்களை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us