ADDED : ஜூலை 23, 2026 12:15 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: மூன்றாவது ஊதிய உயர்வை உடனே வழங்குவது, ஒய்வூதிய மாற்றத்தை உடனே வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருது நகரில் உள்ள பி.எஸ். என்.எல்., அலுவலகத்தில் ஓய்வு பெற்ற பி.எஸ். என்.எல். டி.ஓ.டி., ஓய்வூதியர் சங்கம், ஒப்பந்த ஊழியர் சங்கம், பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏ.ஐ.பி.டி.பி.ஏ., மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.செயலாளர் புளுகாண்டி துவக்கி வைத்தார். மாநில துணை தலைவர் நடராஜா பேசினார்.
ராஜபாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயக் குமார் தலைமை வகித்தார்.
