ADDED : பிப் 11, 2026 06:55 AM

விருதுநகர்: 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்குவது, ஓய்வு சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் பரமசிவம், சிவகாமி, ராம சீனிவாசன், ஜெகதீசன் முன்னிலை வகித்தனர்.மாவட்டத் தலைவர் சிவபெருமான் துவக்கி வைத்துப் பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணி, மாவட்ட செயலாளர் ராமசுப்புராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
போராட்டத்தை ஆதரித்து அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கருப்பையா, ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் போஸ், வங்கி ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகி மாரிக்கனி, ஓய்வு பெற்ற எல்.ஐ.சி ஊழியர் சங்கத்தின் பவளவண்ணன், ஏ.ஐ.பி.டி.பி.ஏ., மாவட்ட பொருளாளர் எம்.பெருமாள்சாமி ஆகியோர் பேசினர்.
