/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குல்லுார்சந்தை நீர் வழிப்பாதையில் சாய்ந்த நிலையில் மின் கம்பம் விபத்து அச்சத்தில் மக்கள்

ADDED : பிப் 13, 2024 05:34 AM

விருதுநகர், : விருதுநகர் அருகே குல்லுார்சந்தையில் அணையின் நீர்வழிப்பதையில் தரைப்பாலம் அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
விருதுநகர் அருகே குல்லுார்சந்தை அணை உள்ளது. இந்த அணை வடகிழக்கு பருவமழையில் நிரம்பியது. மேலும் டிச. 18, 19 ஆகிய தேதிகளில் தொடர்ந்து பெய்த அதீத கனமழையால் மூன்று வாரத்திற்கும் மேலாக மறுகால் பாய்ந்து நீர் வெளியேறி கொண்டே இருந்தது.
இந்நிலையில் மழையின் போது விருதுநகரில் இருந்து குல்லுார்சந்தை செல்லும் தரைப்பாலத்தின் ஒரு பக்கம் சேதம் அடைந்தது. தரைப்பாலத்தை விட 2 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்று தற்போது தான் இயல்பு நிலை திரும்பி உள்ளது. குல்லுார்சந்தை மக்கள், சிரமமின்றி விருதுநகர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தரைப்பாலம் சேதம் அடைந்த பக்கவாட்டு பகுதியில் தொடர் நீரோட்டத்தால் மின்கம்பம் சரிந்துள்ளது. நாளடைவில் இக்கம்பம் சரிந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மின்கம்பம் சரிந்தால் சுற்றியுள்ள கிராமங்களின் மின்சேவை பாதிக்கூடும்.
மேலும் இந்த நீரோட்டத்தில் மக்கள் அடிக்கடி குளிக்கின்றனர், மீன் பிடிக்கின்றனர். இதனால் கம்பம் சரிந்தால் அசாம்பாவிதமும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மின்துறையினர் சரிந்த இந்த மின்கம்பத்தை இடமாற்றி நட நடவடிக்கை எடுக்க வேண்டும்.