/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுற்றுலா தலமாகுமா இருக்கன்குடி எதிர்பார்ப்பில் மக்கள்
/
சுற்றுலா தலமாகுமா இருக்கன்குடி எதிர்பார்ப்பில் மக்கள்
சுற்றுலா தலமாகுமா இருக்கன்குடி எதிர்பார்ப்பில் மக்கள்
சுற்றுலா தலமாகுமா இருக்கன்குடி எதிர்பார்ப்பில் மக்கள்
ADDED : ஜூலை 25, 2025 02:50 AM
சாத்துார்: இருக்கன் குடி அணையில் சிறுவர் பூங்கா, படகு குளாம் ஏற்படுத்தி இருக்கன்குடியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். மேலும் கோட்டூர் குருசாமி கோயிலும் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாக உள்ளது.
இந்த இரு கோயில்களுக்கும் செவ்வாய், வெள்ளி ,சனி ,ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இருக்கன்குடியில் வைப்பாறு அர்ச்சுனா நதி ஆகிய இரு நதிகளுக்கு இடையில் அணை கட்டப்பட்டுள்ளது.
இந்த அணைப்பகுதியின் அருகே காலி நிலத்தில் தற்போது பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் மிகவும் குறைவாக உள்ள நிலையில் இருக்கன்குடி அணை பகுதியை சுற்றுலா தலமாக மாற்றி இங்கு குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மகிழும் வகையில் பூங்கா மற்றும் செயற்கை நீரூற்று அமைக்கவும்
அணைப்பகுதியில் சுற்றிப் பார்க்க வசதியாக படகு குளாம் அமைக்கவும் வேண்டும் என்பது சாத்துார் மற்றும் சுற்றுப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
இவ்வாறு அமைப்பதன் மூலம் இருக்கன்குடி அணைக்கட்டு பகுதி மேலும் அழகு பெறுவதோடு இது சாத்துார் பகுதியில் சுற்றுலா தலமாக மாறும் இதன் மூலம் இந்த பகுதியில் பொருளாதார வளர்ச்சி ஏற்றம் பெறும் எனவே பொதுப்பணித்துறையினர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சாத்துார் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.