/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாந்தோப்பில் வி.ஏ.ஓ., நியமிக்காததால் சான்றிதழ் பெறுவதில் மக்கள் சிரமம்

ADDED : பிப் 01, 2025 04:48 AM
காரியாபட்டி: மாந்தோப்பு கிராமத்திற்கென ஓராண்டாக வி.ஏ.ஓ., இல்லாததால் மக்கள் சான்றிதழ், பட்டா பெறுதல் உட்பட பல்வேறு சேவைகள் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
காரியாபட்டி மாந்தோப்பு கிராமத்தில் பணியாற்றிய வி.ஏ.ஓ., லஞ்சம் பெற்ற வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதற்குப் பின் வரலொட்டி வி.ஏ.ஓ., பொறுப்பு கவனித்து வருகிறார். இரு கிராமங்களையும் கவனிக்க வேண்டி இருப்பதால் வாரத்தில் 1, 2 நாட்கள் மட்டும் வந்து செல்கிறார்.
இந்நிலையில் பணிச்சுமை காரணமாக வி.ஏ.ஓ., பெரும்பாலும் வருவதில்லை. சான்றிதழ்கள் வாங்க, வரலொட்டி வி.ஏ.ஓ., அலுவலகத்திற்குச் சென்று வாங்க வேண்டி இருக்கிறது. மாந்தோப்பு கிராமத்திற்கு உட்பட்ட பெரிய வையம்பட்டி மக்கள் 12 கி.மீ.,தூரம் செல்ல வேண்டும். நீண்ட தூரம் சென்று வர வேண்டி இருப்பதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பட்டா, சிட்டா, மற்ற சான்றிதழ்கள் வாங்க வி.ஏ.ஓ.,வை அனுக வேண்டிய சூழ்நிலை இருப்பதால், தனி வி.ஏ.ஓ., நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.