/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுந்தரபாண்டியத்தில் விரட்டும் நாய்கள் அச்சத்தில் மக்கள்
/
சுந்தரபாண்டியத்தில் விரட்டும் நாய்கள் அச்சத்தில் மக்கள்
சுந்தரபாண்டியத்தில் விரட்டும் நாய்கள் அச்சத்தில் மக்கள்
சுந்தரபாண்டியத்தில் விரட்டும் நாய்கள் அச்சத்தில் மக்கள்
ADDED : அக் 18, 2025 03:32 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் பல்வேறு தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இப்பேரூராட்சியில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் தினமும் ஏராளமானோர் தங்கள் தொழில், கல்வி, வேலை வாய்ப்புக்காக வெளியூர் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களிலும் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து மக்களை அச்சுறுத்தும் வகையில் விரட்டி வருகிறது. இதனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இரவு நேரங்களில் வீடு திரும்புபவர்களையும் நாய்கள் விரட்டுவதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே நாய்கள் இன பெருக்கத்தை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.