/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி எஸ்.மறைக்குளத்தில் வீணாகும் மினரல் பிளான்ட் குடிநீருக்காக திண்டாடும் மக்கள்

ADDED : ஜூலை 25, 2025 02:49 AM
காரியாபட்டி: காரியாபட்டி எஸ்.மறைக்குளத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்தனர்.
நாளடைவில் குடிநீரின் சுவை மாறி, சமையலுக்கு பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. சுண்ணாம்புச்சத்து கலந்திருப்பதால் பலருக்கு சிறுநீரகப் பிரச்னை ஏற்பட்டது. ரூ. பல லட்சம் செலவில் 2 மினரல் பிளான்ட்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் மின் மோட்டார் பழுது, நிலத்தடி நீர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் 5 மாதங்களாக செயல்படாமல் உள்ளது.
பழுது நீக்கி, குடிநீர் சப்ளை செய்யாமல் கிடப்பில் போட்டனர். தற்போது குடிநீருக்காக மக்கள் சிரமப்படுகின்றனர்.
விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருவதால், ஏராளமான செலவு ஏற்படுவதாக புலம்புகின்றனர். புழக்கத்திற்கான தண்ணீரை குடிக்க, சமைக்க பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருப்பதால், மறுபடியும் சிறுநீரகப் பிரச்னை ஏற்படுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
போர்க்கால அடிப்படையில் மினரல் பிளான்ட்டை சீரமைத்து குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.