/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் காய்கனி மார்க்கெட் தெருவில் ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் அவதி
/
சாத்துார் காய்கனி மார்க்கெட் தெருவில் ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் அவதி
சாத்துார் காய்கனி மார்க்கெட் தெருவில் ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் அவதி
சாத்துார் காய்கனி மார்க்கெட் தெருவில் ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் அவதி
ADDED : மே 15, 2025 12:41 AM
சாத்துார்; சாத்துார் காய்கனி மார்க்கெட் தெருவில் ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் அவதிப்படுவதை தடுக்க அவற்றை நகராட்சியினர் அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சாத்துார் சிவன் கோயில் 4 ரத வீதியில் நகராட்சி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. வடக்குரத வீதியில் உள்ள இந்த மார்க்கெட் அமைந்துள்ள தெரு மிகவும் குறுகலானது.
இங்கு கடைகள் நடத்தி வருபவர்கள் பாதையை ஆக்கிரமித்து கூரை வேய்ந்து வியாபாரம் செய்கின்றனர். கட்டடத்தில் காய்கறி கடைகள் வைத்துஉள்ள வியாபாரிகளும் ரோடு வரை ஆக்கிரமித்து கடை போட்டு உள்ளனர்.
இதன் காரணமாக இப் பகுதியில் மக்கள் நெரிசல் ஏற்படுகிறது. காலை நேரத்தில் கிராமங்களில் இருந்து அதிகமாக விவசாயிகள் சில்லறை வியாபாரிகள் இந்த பகுதிக்கு வந்து காய்கறிகளை விற்றும் வாங்கியும் செல்கின்றனர்.
இதனால் காலை நேரத்தில் காய்கறி மார்க்கெட் பகுதியில் நெரிசல் ஏற்படுகிறது. சிறு குழந்தைகள்முதியவர்கள் விலகிச் செல்லகூட முடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது. நகராட்சி காய்கறி கடையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் ரோடு வரை ஆக்கிரமித்து உள்ளதால் மற்ற வியாபாரிகளும் ரோட்டை ஆக்கிரமித்து கடை விரித்துள்ளனர்.
நகராட்சி நிர்வாகம் காய்கறி மார்க்கெட் தெருவில்உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதன் மூலம் இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும்.நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.