ADDED : மார் 13, 2026 07:20 AM

விருதுநகர்: விருதுநகர் பாவாலியில் சமுதாயக் கூட கட்டட திறப்பு விழாவிற்கு வந்த தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவாசனிடம், அடிப்படை வசதிகள கோரி மக்கள் முற்றுகையிட்டனர்.
விருதுநகர் ஒன்றியம் பாவாலி ஊராட்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கூட கட்டட திறப்பு விழாவிற்கு தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவாசன் கலந்து கொண்டார்.
அப்போது தங்கள் பகுதியில் பஸ் வசதி, ரோடு, மயானம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்றும், 2 ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகள் வைத்து வருவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் வி.சி. ஒன்றிய பொரு ளாளர் ராஜ்குமார் தலைமையில், எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்டனர்.
போலீசார், அங்கு வந்த மக்களை மனு அளிக்க அறிவுரை வழங்கி னர். எம்.எல்.ஏ., அந்த இடத்தை விட்டு செல்லும் வரை அப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு அளித்தனர். பின் மக்கள் மனு அளித்ததும், எம்.எல்.ஏ., அங்கிருந்து சென்றார்.
