/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மல்லாங்கிணரில் பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
/
மல்லாங்கிணரில் பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
மல்லாங்கிணரில் பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
மல்லாங்கிணரில் பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 20, 2025 04:05 AM
காரியாபட்டி : மல்லாங்கிணரில் நீண்ட நாள் கோரிக்கையான பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
மல்லாங்கிணர் பேரூராட்சிக்கு 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்காக மல்லாங்கிணர் வருகின்றனர். கல்குறிச்சி - விருதுநகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களுக்கு மல்லாங்கிணர் வழியாக அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பெரிய ஊராக இருந்தும், பஸ்சுக்காக பயணிகள் ரோட்டில் நிற்கின்றனர். கிராம ஊராட்சியான திருச்சுழியில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு வருகிறது. பேரூராட்சியான மல்லாங்கிணரில் பஸ் ஸ்டாண்ட் இல்லாதது பெரும் குறையாக இருந்து வருகிறது.
விருதுநகரில் இருந்து காரியாபட்டிக்கு 10 க்கும் மேற்பட்ட பஸ்களும், அருப்புக்கோட்டை, புதுப்பட்டி, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு தலா 2 பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் பயணிகள் வெயில், மழைக்கு திறந்தவெளியில் நிற்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.
பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்தினால் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் என்கிற நம்பிக்கையோடு பயணிகள் காத்திருப்பர். ஆகவே நீண்ட நாள் கோரிக்கையான மல்லாங்கிணரில் பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.