/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடியில் புது பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
/
நரிக்குடியில் புது பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
நரிக்குடியில் புது பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
நரிக்குடியில் புது பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 05, 2025 04:13 AM

நரிக்குடி : நரிக்குடியில் தற்காலிக பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நின்று செல்ல சிரமமாக இருப்பதால் புது பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்த மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நரிக்குடி, சுற்றியுள்ள நுாற்றுக்கு மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய ஊராக இருந்து வருகிறது. பார்த்திபனூர், அருப்புக்கோட்டை வழித்தடத்தில் உள்ளது. ராமேஸ்வரம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்திற்கு செல்பவர்கள், கி. மீ., குறைவு என்பதால், இந்த வழித் தடத்தை பயன்படுத்துகின்றனர்.
எப்போதும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்நிலையில், நரிக்குடியில் பஸ்கள் நின்று செல்ல தற்காலிக பஸ் ஸ்டாண்ட் மெயின் ரோட்டோரம் உள்ளது. இங்கு பயணிகள் ஒதுங்கி நிற்க வசதி, குடிநீர் வசதி என எதுவும் கிடையாது. மழை, வெயிலுக்கு திறந்தவெளியில் நிற்கின்றனர்.
பஸ் ஸ்டாண்டில் 3 பஸ்கள் மட்டுமே நிறுத்த முடியும்.
ஆத்திர அவசரத்திற்கு மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனை கருத்தில் கொண்டு நரிக்குடியில் நவீன வசதிகளுடன் புது பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.