/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கம்பிக்குடியில் குடிநீர் பிரச்னை சீராக வழங்க மக்கள் எதிர்பார்ப்பு
/
கம்பிக்குடியில் குடிநீர் பிரச்னை சீராக வழங்க மக்கள் எதிர்பார்ப்பு
கம்பிக்குடியில் குடிநீர் பிரச்னை சீராக வழங்க மக்கள் எதிர்பார்ப்பு
கம்பிக்குடியில் குடிநீர் பிரச்னை சீராக வழங்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 14, 2025 02:23 AM
காரியாபட்டி: காரியாபட்டி கம்பிக்குடியில் குடிநீர் பிரச்னை இருந்து வருவதால் மக்கள் சிரமத்தில் உள்ளனர். சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி கம்பிக்குடியில் குடிநீருக்கு உள்ளூரில் ஆழ்துளை கிணறு அமைத்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது. நாளடைவில் சுவை மாறியதால் குடிக்க, சமைக்க பயன் படுத்த முடியவில்லை.
பல்வேறு கோரிக்கை களுக்கு பின், தாமிரபரணி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது தாமிரபரணி குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறை சப்ளை செய்யப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. உள்ளூர் தண்ணீரும் சரிவர சப்ளை கிடையாது. குடிநீரை மக்கள் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஒரு குடம் ரூ. 12க்கு வாங்க வேண்டி உள்ளது. இதற்கு ஏராளமாக செலவு ஏற்படுகிறது கூலி வேலைக்கு செல் பவர்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் ஒரு வாரமாக உள்ளூர் குடிநீரும், புழக்கத்திற்கான தண்ணீரும் சரிவர சப்ளை இல்லை. குளிக்க, துணி துவைக்க நீர் நிலைகள் இல்லாததால் குளியல் தொட்டியை நம்பி இருக்கின்றனர். மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலரும் சிரமப்படுகின்றனர். அவ்வப்போது மின்மோட்டார் பழுது காரணமாகவும் கிடப்பில் போட்டு விடுகின்றனர்.
தண்ணீர் சப்ளை சீராக இல்லாததால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
தாமிரபரணி குடிநீரை 2 நாட்களுக்கு ஒரு முறை யாவது சப்ளை செய்வதோடு, உள்ளூர் குடிநீர், புழக்கத்திற்கான தண் ணீரையும் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.