/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆபத்தான மேல்நிலைத் தொட்டி, ஓடையை கடக்க முடியாது சிரமம் தவிப்பில் காரியாபட்டி பாம்பாட்டி ஊராட்சி மக்கள்
/
ஆபத்தான மேல்நிலைத் தொட்டி, ஓடையை கடக்க முடியாது சிரமம் தவிப்பில் காரியாபட்டி பாம்பாட்டி ஊராட்சி மக்கள்
ஆபத்தான மேல்நிலைத் தொட்டி, ஓடையை கடக்க முடியாது சிரமம் தவிப்பில் காரியாபட்டி பாம்பாட்டி ஊராட்சி மக்கள்
ஆபத்தான மேல்நிலைத் தொட்டி, ஓடையை கடக்க முடியாது சிரமம் தவிப்பில் காரியாபட்டி பாம்பாட்டி ஊராட்சி மக்கள்
ADDED : டிச 24, 2024 04:09 AM

காரியாபட்டி: சேதமடைந்து ஆபத்தான நிலையில் மேல்நிலைத் தொட்டி, கண்மாய் வரத்து ஓடையை கடந்து விவசாய பணிகளுக்கு செல்ல வேண்டி உள்ளதால், மழை நேரங்களில் சிரமம் என காரியாபட்டி பாம்பாட்டி ஊராட்சி மக்கள் பரிதவிப்பில் உள்ளனர்.
காரியாபட்டி பாம்பாட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாஞ்சார் , பணிக்கனேந்தல் கிராமங்கள் உள்ளன. பாம்பாட்டியில் சுகாதார வளாகம் பயன்பாடின்றி உள்ளதால், மக்கள் திறந்தவெளியை நாடுகின்றனர். சுகாதாரத் கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டி சேதமடைந்து கம்பிகள் துருப்பிடித்து எப்போது இடிந்து விழுமோ என்கிற நிலையில் உள்ளது. பள்ளி அருகில் இருப்பதால் மாணவர்கள், கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர். விபத்திற்கு முன் அப்புறப்படுத்த எதிர்பார்க்கின்றனர். தட்சிணாமூர்த்தி கோயில் வீதி உள்ளிட்ட ஒரு சில வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க, நிழற்குடை கட்ட வலியுறுத்தினர்.
பாஞ்சாரில் காலனி தெருவிற்கு ரோடு வசதி கிடையாது. நிழற்குடை சேதமடைந்து மோசமாக இருக்கிறது. மழை வெயில் நேரங்களில் ஒதுங்க முடியவில்லை. பள்ளி அருகே உள்ள ஓடையில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. அப்பகுதியில் மாணவர்கள் நடமாட்டம் இருப்பதால் ஆபத்தான சூழ்நிலை உள்ளது.
தடுப்பணை கட்ட எதிர்பார்க்கின்றனர். இங்குள்ள கண்மாய்க்கு நீர் வரத்து ஒடையை கடந்து விவசாய பணிகளுக்கு செல்ல வேண்டியிருப்பதால், மழை நேரங்களில் மழைநீர் தேங்கி, தானியங்களை கொண்டு வர முடியாமல் விவசாயிகள் புலம்புகின்றனர். அதே போல் அச்சங்குளத்திற்கு ஏற்படுத்தப்பட்ட ரோட்டில் கண்மாய் அருகே ஓடையை கடந்து செல்ல முடியவில்லை. இரு இடங்களிலும் பாலம் கட்ட வலியுறுத்தினர்.
பணிக்கனேந்தலில் உள்ள வீதிகளில் பேவர் பிளாக் கற்கள், குளியல் தொட்டி கிடையாது. மேல்நிலைத் தொட்டி இல்லாததால் குடிநீர் சப்ளை செய்வதில் பிரச்னை இருந்து வருகிறது.
வரத்து ஓடையை கடந்து செல்ல முடியாமல் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதால் ஓடையில் பாலம் கட்ட வேண்டும். மெட்டல் ரோட்டில் தார் ரோடு போட வேண்டும். பள்ளி அருகே மண் சரிவு ஏற்பட்டு வருவதால் தடுப்பணை கட்ட வேண்டும். மேல்நிலைத் தொட்டி இடிந்து விழும் நிலையில் இருப்பதால் விபத்திற்கு முன் அப்புறப்படுத்த வேண்டும். சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 2 கி.மீ., துாரத்திற்கு மெயின் ரோடு கொண்டை ஊசி வளைவு போல் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இரு வாகனங்கள் விலகி செல்லும் வகையில் ரோடு அமைக்க வேண்டும். குடிநீர் சப்ளை செய்ய மேல்நிலைத் தொட்டி கட்ட வேண்டும்.
- வீரபாண்டி, விவசாயி.