/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமடைந்த பேவர் பிளாக் ரோடு சிரமத்தில் கூமாபட்டி மக்கள்
/
சேதமடைந்த பேவர் பிளாக் ரோடு சிரமத்தில் கூமாபட்டி மக்கள்
சேதமடைந்த பேவர் பிளாக் ரோடு சிரமத்தில் கூமாபட்டி மக்கள்
சேதமடைந்த பேவர் பிளாக் ரோடு சிரமத்தில் கூமாபட்டி மக்கள்
ADDED : ஜூன் 28, 2025 12:07 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் பல்வேறு தெருக்களில் குடிநீர் குழாய் இணைப்புக்காக தோண்டப்பட்ட பேவர் பிளாக் ரோடுகள் பல மாதங்களாக சீரமைக்காததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
கூமாபட்டியில் பல்வேறு வார்டுகளுக்கான குடிநீர் திட்ட பணிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேவர் பிளாக் ரோடுகள் தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடந்தது.
இதில் யாதவர் தெரு, காளியம்மன் கோயில் தெரு, சர்ச் தெரு உட்பட பல்வேறு தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் மீண்டும் முறையாக பதிக்கப்படாமல் முறையில் உள்ளது.
இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் மக்கள்சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். டூவீலர்களில் செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே, ரோட்டினை விரைவில் சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.