/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான தொட்டி, சுற்றுச்சுவர், கழிவு தேங்கும் ஊருணி சிரமத்தில் பிசிண்டி ஊராட்சி மக்கள்
/
சேதமான தொட்டி, சுற்றுச்சுவர், கழிவு தேங்கும் ஊருணி சிரமத்தில் பிசிண்டி ஊராட்சி மக்கள்
சேதமான தொட்டி, சுற்றுச்சுவர், கழிவு தேங்கும் ஊருணி சிரமத்தில் பிசிண்டி ஊராட்சி மக்கள்
சேதமான தொட்டி, சுற்றுச்சுவர், கழிவு தேங்கும் ஊருணி சிரமத்தில் பிசிண்டி ஊராட்சி மக்கள்
ADDED : ஜூலை 08, 2025 01:14 AM

காரியாபட்டி: மேல்நிலைத் தொட்டி, தடுப்புச் சுவர், சுற்றுச் சுவர் சேதமடைந்திருப்பது, ஊருணியில் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு விளைவிப்பது, குடிநீர் பிரச்னை என பிசிண்டி ஊராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
காரியாபட்டி பிசிண்டி ஊராட்சியில் அச்சங்குளம், வடகரை கிராமங்கள் உள்ளன. பிசிண்டியில் தரைதள தொட்டிகள் செயல்படாமல் உள்ளது. மகளிர் சுகாதார வளாகம் முற்றிலும் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஊருணியில் கழிவு நீர் தேங்கி வருகிறது. குப்பைகளை கொட்டி வருவதால் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. 4 மயானங்கள் உள்ளன. தண்ணீர் வசதி கிடையாது. சின்ன காளியம்மன் கோயில் தெருவில் வாறுகால் வசதி இல்லை. சேரும் சகதியுமாக உள்ளது. சமுதாய கூடம் கிடையாது.
அச்சங்குளத்தில் பள்ளி சுற்றுச் சுவர் சேதமடைந்துள்ளது. மாணவர்கள் அப்பகுதியில் விளையாடுவதால் விபத்து ஏற்படும் அச்சம் உள்ளது. மயானத்திற்கு ரோடு வசதி, தண்ணீர் வசதி, காத்திருப்போர் அறை கிடையாது. 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. பற்றாக்குறையாக இருப்பதால் விலைக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. துலுக்கன்குளம் செல்லும் ரோடு படுமோசமாக உள்ளது. வாகனங்கள் சென்றுவர முடியவில்லை.
வடகரையில் சிமென்ட் ரோடு சரிவர அமைக்கவில்லை. மயானத்தில் கொட்டகை இல்லாததால் இறப்பு சமயத்தில் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. தெருவிளக்குகள் சரிவர எரியவில்லை. சுகாதார வளாகம், மேல் நிலை தொட்டி, சமுதாயக்கூட தரை தளம் சேதமடைந்துள்ளது. பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருவதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
சமுதாய கூடத்தில் தரைத்தளம் சேதமடைந்து உள்ளது. சீரமைக்க வேண்டி பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. வாறுகால் வசதி, சிமென்ட் ரோடு சரிவர இல்லாததால் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. ஊருணி தடுப்புச் சுவர் சேதம் அடைந்துள்ளது.
- கார்த்தி, தனியார் ஊழியர், வடகரை.
மக்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. ஒரு சில பணிகள் நிதி இல்லாததால் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. உரிய நேரத்தில் நிறைவேற்றாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜேஸ்வரி, முன்னாள் ஊராட்சி தலைவர், அச்சங்குளம்.
உள்ளூர் குடிநீர் சப்ளை இல்லாததால் சிரமம் ஏற்படுகிறது. 10 நாட்களுக்கு ஒரு முறை சப்ளை செய்வதால் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. தாய் சேய் நல விடுதி சேதமடைந்துள்ளதால் செவிலியர் தங்கி பணிபுரிய சிரமம் ஏற்படுகிறது. சுற்றியுள்ள பல்வேறு கிராம கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது. செவிலியர் தங்கி பணி புரிய புதிய கட்டடம் கட்ட வேண்டும்.
- ராஜா, தனியார் ஊழியர், பிசிண்டி.