/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடி கட்டனுாரில் மலக்கசடு திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு
/
நரிக்குடி கட்டனுாரில் மலக்கசடு திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு
நரிக்குடி கட்டனுாரில் மலக்கசடு திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு
நரிக்குடி கட்டனுாரில் மலக்கசடு திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு
ADDED : நவ 12, 2025 12:07 AM
நரிக்குடி: கட்டனூரில் மலக் கசடு திட்டத்தை செயல்படுத்த கூடாது என மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், குறைதீர் கூட்டத்திலும் வலியுறுத்தினர்.
நரிக்குடி பகுதிக்கான மலக்கசடு திட்டம் கட்டனூரில் உள்ள 10 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
நரிக்குடி பகுதியில் செப்டிக் டேங்க் பயன்பாடு மிகக் குறைவு. இத் திட்டத்தால் எந்த பயனும் இல்லை.
அதற்காக செலவிடும் பணத்தை குடிநீர், நீர்நிலைகளுக்கு தண்ணீர் கொண்டு வர ஓடைகள், வரத்துக் கால்வாய்களை தூர் வார, ரோடு வசதி செய்து தர பயன்படுத்த வேண்டும் என கலெக்டர், ஆர்.டி.ஓ., குறை தீர் கூட்டத்தில் வலியுறுத்தினர்.
மச்சேஸ்வரன், விவசாயி, கட்டனுார்: செப்டிக் டேங்க் கழிவுகளை கட்டனூரில் சுத்திகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி மாசுபடும் சூழ்நிலை உள்ளது. விவசாயம் பாதிக்கப்படும்.
நீர்நிலைகள் மாசுபடும். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமே விவசாயம் தான். அதனைப் பாதிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் இப்பகுதியில் செயல்படுத்த விடமாட்டோம் என்றார்.

