/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடி கட்டனுாரில் காய்ந்த புற்களில் தீ வைக்கும் நபர்கள் மரங்கள் கருகி சேதமாகும் அவலம்

ADDED : ஆக 04, 2025 03:42 AM
நரிக்குடி: நரிக்குடி கட்டனுார் பகுதியில் காடுகளில் காய்ந்த புற்கள், சருகுகளில் மர்ம நபர்கள் தீ வைப்பதால் பரவி பனை, வேம்பு உள்ளிட்ட மரங்கள் எரிந்து நாசமாகியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
நரிக்குடி கட்டனுார் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு விவசாயம் முடிந்து, பெரும்பாலான காடுகளில் அறுவடை செய்த பயிர்களின் துார் பகுதியை அப்படியே விட்டுவிடுகின்றனர். அத்துடன் புற்கள் வளர்கின்றன.
கடுமையான வெயிலுக்கு தாக்கு பிடிக்காமல் புற்கள் கருகி கிடக்கின்றன. இதில் மர்ம நபர்கள் தீ வைக்கின்றனர். சருகுகளில் மள மளவென தீ பரவுகிறது. அக்கம் பக்கத்தில் தோட்ட விவசாயத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு பரவி கருகுகின்றன.
விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அப்பகுதியில் வளர்ந்துள்ள நூற்றுக்கணக்கான பனை, வேம்பு உள்ளிட்ட மரங்களும் எரிந்து நாசமாகின. இது தொடர்கதையாக அப்பகுதியில் நடந்து வருகிறது. நேற்றும் அதே போல் சருகுகளில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் அப்பகுதியில் நன்கு வளர்ந்திருந்த மகாகனி, மலைவேம்பு, வேம்பு, புங்கை, கொடிக்காய், சொட்டு நீர் பைப்கள் எரிந்து நாசமாகின.
விவசாயிகள் செய்வது அறியாது வேதனை அடைந்தனர். ஏற்கனவே இதுகுறித்து பல முறை போலீசாரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து இச்செயலில் ஈடுபடும் சமூக விரோதிகளை போலீசார் கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.