/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பேட்டை முன் கழிவுநீர் தேக்கம் நோய் அச்சத்தால் மக்கள் அவதி
/
பேட்டை முன் கழிவுநீர் தேக்கம் நோய் அச்சத்தால் மக்கள் அவதி
பேட்டை முன் கழிவுநீர் தேக்கம் நோய் அச்சத்தால் மக்கள் அவதி
பேட்டை முன் கழிவுநீர் தேக்கம் நோய் அச்சத்தால் மக்கள் அவதி
ADDED : மார் 06, 2024 05:41 AM

விருதுநகர் : விருதுநகரில் பேட்டை முன் கழிவுநீர் தேங்கி நோய் அச்சத்தை ஏற்படுத்துவதால் மக்கள் அவதியை சந்தித்துள்ளனர்.
விருதுநகர் மதுரை ரோடு நகராட்சி குடிநீர் தொட்டி அமைந்துள்ள பேட்டை முன் வாறுகால் வசதி இல்லை. ஆனால் வழித்தடம் உள்ளது. இதனால் எப்போதும் சிறிதளவு நீராவது தேங்கி நிற்கும். சில நாட்களாக அப்பகுதியில் வாறுகால் சரிவர அள்ளாமல் விட்டதால் கழிவுநீர் தேக்கமாகி மாறிவிட்டது.
நேற்று தொழிற்பேட்டையின் முகப்பு பகுதி கடைகள் வரை கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தியது. இது நகரின் மையப்பகுதியில் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். நகராட்சி நிர்வாகம், வாறுகாலை சுத்தப்படுத்தி இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக ஆழமான வாறுகால் கட்ட வேண்டும்.
பா.ஜ., பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் சேர்ந்த குருசாமி கூறியதாவது: கழிவுநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் இவ்வழியை பயன்படுத்த முடியவில்லை. கடும் சிரமமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

