/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊராட்சிகளில் அறிவிக்கப்படாத மின்தடையால் மக்கள் அவதி
/
ஊராட்சிகளில் அறிவிக்கப்படாத மின்தடையால் மக்கள் அவதி
ஊராட்சிகளில் அறிவிக்கப்படாத மின்தடையால் மக்கள் அவதி
ஊராட்சிகளில் அறிவிக்கப்படாத மின்தடையால் மக்கள் அவதி
ADDED : ஆக 07, 2025 11:13 PM
சிவகாசி:சிவகாசி அருகே ஆனையூர் ஊராட்சி பூலாவூரணி ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின்தடையால் மக்கள் அவதிப்படுகின்றனர். சிவகாசி அருகே ஆனையூர் ஊராட்சி பூலாவூரணி ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சாட்சியாபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுகின்றது. ஆனையூர் ஊராட்சி முனீஸ் நகர், கட்டளைப்பட்டி பூலாவூரணி ராஜதுரை நகர், பிருந்தாவனம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது.
காலையில் 9:00 மணிக்குள் மூன்று முறை அரை மணி நேரத்திற்கு ஒருமுறை மின்தடை ஏற்படுகிறது. மதியம் இரவு என அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது. காலை நேரத்தில் ஏற்படும் மின்தடையால் பள்ளி, கல்லுாரி செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
இரவில் ஏற்படும் மின்தடையால் மின்விசிறி இயங்காமல் குழந்தைகள் பெரியவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
இப்பகுதியில் அதிகளவில் அச்சகங்கள் நிறுவனங்களும் உள்ளன. மின் தடையால் தொழில்களும் பாதிக்கப்படுகின்றது.
இதேபோல் நகர் பகுதிகளிலும் அவ்வப்போது ஏற்படும் அறிவிக்காத படாத மின்தடையால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே மின்தடை ஏற்படுவதை தடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.