ADDED : ஜூன் 24, 2026 10:53 PM

அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்ஸவத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நேற்று நடந்தது.
நேற்று காலை 6:30 மணிக்கு கோயிலிலிருந்து புறப்பட்ட பெரியாழ்வார் செப்பு தேரில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின் கோவிந்தா கோபாலா கோஷத்துடன் தேரினை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகள் சுற்றி வந்து தேர் நிலையம் அடைந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.
