/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் ஊராட்சிகளில் நிரந்தர துாய்மை பணியாளர்கள் தேவை
/
சாத்துார் ஊராட்சிகளில் நிரந்தர துாய்மை பணியாளர்கள் தேவை
சாத்துார் ஊராட்சிகளில் நிரந்தர துாய்மை பணியாளர்கள் தேவை
சாத்துார் ஊராட்சிகளில் நிரந்தர துாய்மை பணியாளர்கள் தேவை
ADDED : மே 17, 2025 12:41 AM
சாத்துார்: சாத்துார் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நிரந்தர துாய்மை பணியாளர்களை நியமிக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சாத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 46 ஊராட்சிகள் உள்ளன. தற்போது ஊராட்சிகள் நகராட்சிக்கு இணையாக வளர்ச்சி பெற்று வருகிறது.
ஆனால் இங்கு துாய்மைப் பணிகளை மேற்கொள்ள போதுமான பணியாளர்கள் இல்லாத நிலை உள்ளது. சராசரியாக ஊராட்சிக்கு 12 முதல் 16 நிரந்தர பணியாளர்கள் இருந்த நிலையில் தற்போது வயது மூப்பு காரணமாக பல ஊராட்சிகளில் துப்புரவு பணியாளர்கள் ஓய்வு பெற்று விட்டனர்.
வாறுகால் சுத்தம் செய்வது தெருவில் குப்பைகளை பெருக்குவது போன்ற பணிகள் செய்வதற்கு தற்போது ஆட்கள் இல்லாத நிலை உள்ளது.
பிற ஊராட்சிகளில் உள்ள துப்புரவு பணியாளர்களை ஒவ்வொரு ஊராட்சிக்கு அழைத்துச் சென்று பணிகளை செய்து வருகின்றனர்.
இதனால் ஊராட்சிகளில் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. சுழற்சி முறையில் சுத்தம் செய்வதாலும் பணியாளர்கள் சோர்வு அடையும் நிலை உள்ளது.
எனவே ஊராட்சிகள் தோறும் மக்கள் தொகைக்கு ஏற்ப நிரந்தர துப்புரவு பணியாளர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.