/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகராட்சிக் கூட்டம் நடத்தக் கோரி மனு
/
நகராட்சிக் கூட்டம் நடத்தக் கோரி மனு
ADDED : அக் 07, 2025 03:36 AM
விருதுநகர்: அருப்புக்கோட்டை நகராட்சி மார்க்சிஸ்ட் கவுன்சிலர் பாலசுப்பிரமணி, கலெக்டர் சுகபுத்ராவிடம் அளித்த மனு: நகராட்சி பகுதிகளில் பணிகள் முறையாக நடக்கவில்லை. குடிநீர் வினியோகம், வாறுகால் சுத்தம் செய்யும் பணிகள் நடக்கவில்லை. மழை பெய்தால் தற்காலி பஸ் ஸ்டாண்டிற்குள் தண்ணீர் தேங்குகிறது. விவாதிப்பதற்கு மன்றப் பொருள் இல்லையெனக் கூறி ஆக., செப்., மாத கூட்டங்களை நகராட்சி தலைவர், கமிஷனர் நடத்தவில்லை. இதனால் நகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளைப் பேசி தீர்வுகாண முடியாத நிலை உள்ளது.
ஆனால் நகராட்சி விதிகளின்படி மாதம் ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும். கலெக்டர் அருப்புக்கோட்டை நகராட்சியில் கூட்டம் மாதம்தோறும் நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும், எனக் கேட்டுள்ளார்.