ADDED : செப் 16, 2025 03:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே குன்னார் சின்னத்தம்பி கோவில் தெருவிற்கு புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டி முடித்து ஓராண்டாகியும் இதுவரை தண்ணீர் ஏற்றப்பட்டு விநியோகம் செய்யப்படவில்லை.
இது குறித்து அப்பகுதியினர் உள்ளாட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று காலை விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு கிராமத்தினர் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.

