/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குவியும் குப்பை, திறந்த வெளி கழிப்பறை
/
குவியும் குப்பை, திறந்த வெளி கழிப்பறை
ADDED : டிச 03, 2024 05:08 AM
சத்திரப்பட்டி: திறந்த வெளி கழிப்பறை,குவியும் குப்பை, செப்பனிடாத குடிநீர் குழாய் பள்ளங்கள், நாய்கள் தொல்லை உட்பட பல்வேறு பிரச்சனைகளால் சத்திரப்பட்டி ஊராட்சி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த சத்திரப்பட்டி ஊராட்சி. நடுத்தெரு, வடக்கு தெரு, கிழக்கு தெரு, புது தெரு என குடியிருப்புகள் மட்டும் அதிகம் உள்ளதால் ஊராட்சிக்கு என வரி வருவாய் இனங்கள் அதிகம் இல்லை. ஊராட்சியில் இருந்து மூன்று பொதுக்கழிப்பறைகளும் ஊர் சார்பில் ஒரு பெண்களுக்கான கழிப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது.
ஊரைச் சுற்றி விசைத்தறிக்கூடங்களும், மருத்துவ துணி உற்பத்தி கூடங்கள் நிறைந்துள்ளது. அருகாமையில் உள்ள மேலராஜகுலராமன், சமசிகாபுரம், சங்கரபாண்டியபுரம் ஊராட்சிகளும் ஒன்றுடன் இணைந்து உள்ளதால் கழிவுகள் நீக்க பிரச்சனை பெரிதாக உள்ளது. இதனால் கண்மாய் ஓடைகளையும் ஊர் நுழைவுப் பகுதி ரோட்டோரங்களையும் திறந்த வெளியாக பயன்படுத்தும் அவலம் உள்ளது.
மெயின் ரோட்டில் இருந்து கிராமத்திற்கு நுழையும் இடம் குப்பை குவியலாக காட்சியளிக்கின்றன. பொது சமுதாயக்கூடம் இல்லாததால் திருமணம் சடங்கு உள்ளிட்ட விசேஷங்களுக்கு தனியார் மண்டபங்களையே நாட வேண்டி உள்ளது. தெரு நாய்கள் கூட்டமாக தெரிவதால் இரவு நேரங்களில் தெருவில் நடக்க மக்கள் பயப்படுகின்றனர். ஜல்ஜீவன் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முழுமையாக சரி செய்யப்படவில்லை.