/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கலில் தொடருது குழாய் உடைப்பு; வீணாகும் குடிநீரால் அதிருப்தியில் மக்கள்

ADDED : மார் 20, 2024 12:01 AM

சிவகாசி : திருத்தங்கலில் மீண்டும் மீண்டும் குழாய் உடைந்து குடிநீர் ரோட்டில் ஓடி வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும் ரோடு சேதமடைந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
திருத்தங்கல் பாண்டியன் நகர், சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக பாண்டியன் நகரில் மானுார் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாண்டியன் நகர் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி ரோட்டில் வீணாக ஓடுகிறது.
தவிர இதே பகுதியில் ரோடு சேதம் அடைந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கோடைகாலம் துவங்கும் முன்பே வெயில் கொளுத்துவதால் குடிநீரின் தேவை அதிகரிக்கும்.
இந்நிலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே குழாய் உடனடியாக உடைப்பினை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.