/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடிந்து விழும் நிலையில் பிசிண்டி பள்ளி மேல்நிலைத்தொட்டி, சுற்று சுவர்

ADDED : அக் 26, 2025 06:39 AM

காரியாபட்டி: காரியாபட்டி பிசிண்டியில் பள்ளி அருகே மேல்நிலைத் தொட்டி, சுற்று சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. விபத்திற்கு முன் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி பிசிண்டியில் 20 ஆண்டுகளுக்கு முன் பள்ளி வளாகம் அருகே மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. அப்பகுதியில் நாய்கள், பன்றிகள், கோழிகள் அசுத்தம் செய்தன. சமூக விரோத செயல்கள் நடந்தன. 10 ஆண்டுகளுக்கு முன் பள்ளிக்கு சுற்று சுவர் கட்டப்பட்டது. நாளடைவில் சேதம் அடைந்து வருகிறது.
மேல்நிலைத் தொட்டி வலுவிழந்து கசிவு ஏற்பட்டு, எப்போது இடிந்து விழுமோ என்கிற அச்சம் உள்ளது. சுற்று சுவரும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளி அருகில் இருப்பதால் மாணவர்கள் அங்கு செல்ல வாய்ப்பு உள்ளது.
தற்போது பருவமழை காரணமாக நிலத்தடி குளிர்ந்து ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இதற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சுற்று சுவர் விழும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. மாணவர்களின் நலன் கருதி அங்குள்ள மேல்நிலைத் தொட்டி, சுற்று சுவரை அப்புறப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிரமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.