ADDED : மார் 09, 2026 07:43 AM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 'நட்டு வளர்ப்போம் 2026' என்ற பெயரில் முறம்பு அருகே வாழவந்தாள் புரம் கோயில் வளாகத்தை சுற்றி ஒரே நாளில் ஆயிரம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
குட் லக் அகாடமி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு சிவகிரி வனச்சரக அலுவலர் கதிரவன் தலைமை வகித்தார். வனவர்கள் பிரகாஷ், குமார், சந்தோஷ் குமார் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு மரக் கன்றுகளுக்காக குழிகள் தயார் செய்யப்பட்டு புங்கை, புரசு, வேம்பு உள்ளிட்ட ஆள் உயர மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. வாழவந்தாள் புரம், முறம்பு உள்ளிட்ட பகுதி ஊர் தலைவர்கள், சமூக அமைப்பினர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை குட் லக் அகாடமி சார்பில் கல்பனா, மணிமாலா செய்தனர்.
