/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் ரோட்டில் வாறுகாலில் கொட்டிய பிளாஸ்டிக் கழிவுகள்
/
சாத்துார் ரோட்டில் வாறுகாலில் கொட்டிய பிளாஸ்டிக் கழிவுகள்
சாத்துார் ரோட்டில் வாறுகாலில் கொட்டிய பிளாஸ்டிக் கழிவுகள்
சாத்துார் ரோட்டில் வாறுகாலில் கொட்டிய பிளாஸ்டிக் கழிவுகள்
ADDED : மே 22, 2025 12:23 AM

சிவகாசி:சிவகாசி பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள வாறுகாலில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் கழிவுநீர் வெளியேற வழி இன்றி ஒரே இடத்தில் தேங்கியுள்ளது. வாறுகாலை துார்வார வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி பஸ் ஸ்டாண்ட் எதிரே சாத்துார் ரோட்டில் கழிவுநீர் மழை நீர் வெளியேறி செல்வதற்காக வாறுகால் அமைக்கப்பட்டது. இந்த வாறுகால் முழுவதுமே பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் தேங்கி விட்டது. சிறிய மழை பெய்தாலும் கழிவு நீர் ரோட்டில் ஓடி வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
தவிர அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனால் இதனை கடந்து செல்கின்ற வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே உடனடியாக வாறுகாலை துார்வாரி கழிவுகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.