/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கல் செங்குளம் கண்மாய் ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள்
/
திருத்தங்கல் செங்குளம் கண்மாய் ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள்
திருத்தங்கல் செங்குளம் கண்மாய் ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள்
திருத்தங்கல் செங்குளம் கண்மாய் ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள்
ADDED : அக் 28, 2025 03:27 AM

சிவகாசி: திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகே செங்குளம் கண்மாய் செல்லும் ஓடையில் கொட்டிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் டெங்கு கொசு உற்பத்தியாகி மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
சிவகாசி அருகே திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகே பழைய வெள்ளையாபுரம் ரோட்டில் ரோட்டில் செங்குளம் கண்மாய் செல்லும் ஓடை பெரிய கிடங்காக உள்ளது. இப்பகுதியில் வாறுகால் இல்லாததால் பாண்டியன் நகர், சத்யா நகரின் மொத்த கழிவுகளும் இங்கு தேங்குகின்றது. இதில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு முழுமையாக நிறைந்துள்ளது. இதனால் டெங்கு கொசு உற்பத்தி கேந்திரமாக மாறிவிட்டது.
இதனருகில் மாநகராட்சி மண்டல அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இங்கு வரும் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் ஏற்படுவதால் வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனருகே உள்ள அங்கன்வாடி மைய குழந்தைகள் தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். எனவே கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

