/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆறுகளில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள்: டெங்கு பரவும் அபாயம்
/
ஆறுகளில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள்: டெங்கு பரவும் அபாயம்
ஆறுகளில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள்: டெங்கு பரவும் அபாயம்
ஆறுகளில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள்: டெங்கு பரவும் அபாயம்
ADDED : ஜன 12, 2024 12:34 AM
சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் ஆறுகளில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளில் மழைநீர் தேங்கி ஏ.டி.எஸ்.,உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகளைளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகரில் கௌசிகா நதி ,வெங்கடாசலபுரத்தில் உப்போடை நதி, ஆர் .ஆர். நகரில் அர்ச்சனா நதி ,சாத்துாரில் வைப்பாறு நதி, குண்டாயிருப்பில் காயல்குடி நதி ,காரியபட்டிகுண்டாறு ஆகிய நதிகள் ஓடுகின்றன. இந்த நதிகளில் மணல் முற்றிலும் எடுக்கப்பட்ட நிலையில் ஆறுகளில் முள் செடிகள் காடு போல வளர்ந்துள்ளது.
டிச. 18 ,19 இரு நாட்களில் விருதுநகர் மாவட்டம் முழுதும் பெய்த பலத்த மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்கள் ,குளங்கள் ஆறுகள் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது.
வெள்ளப்பெருக்கு காரணமாக குடியிருப்பு பகுதியில் இருந்த பெரும்பான்மையான பிளாஸ்டிக் கழிவுகள் ஆற்றுக்கு அடித்துக் கொண்டு வரப்பட்டு முள் செடிகளில் சிக்கி தேங்கியுள்ளன.
இந்த முள்செடிகளில் உள்ள பிளாஸ்டிக் கேரி பைகள் மற்றும் கேன்கள் மது பாட்டில்களில் மழை நீர் தேங்குகிறது. சுத்தமான நீரில் மட்டுமே ஏ.டி.எஸ். போன்ற கொசுக்கள் உருவாகும்.
ஏ டி எஸ் கொசுக்கள் கடித்தால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய நிலை உள்ளது. தற்போது ஆறுகளில் அதிகமான அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து உள்ளன. இதில் ஏ டி எஸ் கொசு உற்பத்தி அதிகமாக உருவாகும் நிலையும் அபாயமும் உள்ளது.
உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஆறுகள் குளங்களில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை போர்க்கால அடிப்படையில் அகற்றி விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.