/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பி.எம். கிசான் தொகை தடையின்றி வர நில உடைமை பதிவேற்றம் அவசியம்
/
பி.எம். கிசான் தொகை தடையின்றி வர நில உடைமை பதிவேற்றம் அவசியம்
பி.எம். கிசான் தொகை தடையின்றி வர நில உடைமை பதிவேற்றம் அவசியம்
பி.எம். கிசான் தொகை தடையின்றி வர நில உடைமை பதிவேற்றம் அவசியம்
UPDATED : மே 09, 2025 04:35 AM
ADDED : மே 09, 2025 01:19 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகள் பயன்பெற மே 31 வரை நடக்கும் சிறப்பு முகாமில் பங்கேற்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு: பி.எம்., கிசான் எனும்கவுரவ நிதி திட்டத்தின் கீழ், தகுதியுடைய அனைத்து விவசாயிகள் விடுபாடின்றி பயன்பெற சிறப்பு முகாம் விருதுநகர் மாவட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் அலுவலகம், அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குர்கள் அலுவலகங்கள், இந்தியன் போஸ்ட் பேமன்ட்ஸ் வங்கி,பொது சேவை மையங்களில் மே 2 முதல் நடந்து வருகிறது.
இத்திட்டத்தில் 20 வது தவணை 2025 ஜூன் மாதத்தில் வழங்கப்பட உள்ளது. இந்த முகாமில் தகுதியுடைய விவசாயிகளின் நிலம் தொடர்பான விபரங்கள், வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பது, இ- கே.ஒய்.சி., போன்றஅனைத்து முழுமையற்ற விபரங்களை சரி செய்து விவசாயிகள் பயன்பெறலாம்.
இத்திட்டத்தில் சேர விடுபட்ட விவசாயிகள் பி.எம்., கிசான் வலைதளத்தில் நில உடமைகளை பதிவேற்றம் செய்த அடையாள எண்ணுடன் பதிவு செய்து பயன்பெறலாம்.மேலும் மாவட்டத்தில் ஏற்கனவே பி.எம்.கிஸான் 19வது தவணைத்தொகை பெற்று வந்த விவசாயிகளில் 16,493 விவசாயிகள் நில உடமை பதிவுகளை செய்யவில்லை.20வது தவணை தடையின்றி பெற நில உடைமை பதிவுகளை பதிவு செய்ய வேண்டும்.
இறந்த பயனாளிகளின் இறப்பு சான்று சமர்ப்பித்து, அவர் பெற்று வரும் நிதியை நிறுத்தவும், வாரிசுதாரர்கள் இத்திட்டத்தில் பயன்பெற தேவையான நிலஆவணங்களை பி.எம்.,கிஸான் திட்ட முகாமில் சமர்ப்பித்து பயன்பெறலாம், என்றார்.