நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: பாரதிய மஸ்துார் சங்க மாவட்ட செயலாளர் கணேசன், கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு: மாவட்டத்தில் தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டம் 1995ன்படி 2014 செப். முதல் ரூ.ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள பொருளாதார சூழலில் இந்த ரூ.ஆயிரம் என்பது போதுமானதாக இல்லை. இதை 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
மேலும் இந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழும் காப்பீடு செய்து மருத்துவ உதவிக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும், என கேட்டுள்ளார்.