தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இறந்தவர் மீது போக்சோவில் வழக்கு

 இறந்தவர் மீது போக்சோவில் வழக்கு

 இறந்தவர் மீது போக்சோவில் வழக்கு


ADDED : மே 23, 2026 03:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 03:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்தவர், கேன்சரால் உயிரிழந்த நிலையில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்தவர் செல்வம் 25, கூலித் தொழிலாளி.இவர் 2025ல் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்தார். கேன்சரால் செல்வம் ஏப்.,14ல் உயிரிழந்தார்.

இதனால் அச்சிறுமியை பெற்றோர் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு தலைசுற்றல் ஏற்பட்டு மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில் சிறுமியின் தாய் அளித்த புகாரில், இறந்துபோன செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us