தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ க்யூ.ஆர்., கோடு செயலியில் வார விடுப்பு: நவீனமாக்க போலீசார் எதிர்பார்ப்பு

 க்யூ.ஆர்., கோடு செயலியில் வார விடுப்பு: நவீனமாக்க போலீசார் எதிர்பார்ப்பு

 க்யூ.ஆர்., கோடு செயலியில் வார விடுப்பு: நவீனமாக்க போலீசார் எதிர்பார்ப்பு


ADDED : ஏப் 23, 2026 09:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 09:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் போலீசாருக்கு வார விடுப்புகளை ஸ்டேஷனில் நோட்டில் பதிவு செய்து வழங்குகின்றனர். இந்த நடைமுறையை நவீனமாக்க க்யூ.ஆர்., கோடு செயலியில் வார விடுப்புகளை பதிவு செய்யும் நடைமுறையை கொண்டுவர வேண்டும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

மாவட்டத்தில் போலீசாருக்கு வார விடுப்பு வழங்கும் நடைமுறை ஸ்டேஷன்களில் நோட்டில் பதிவு செய்யப்பட்டு சுழற்சி முறையில் இன்ஸ்பெக்டர்கள் ஒப்புதலுடன் வழங்கப்படுகிறது. முக்கியஸ்தர்கள் வருகை, பண்டிகை நாட்கள், திருவிழாக்களில் பாதுகாப்பு பணிகளுக்கு போலீசார் தேவைப்படும் போது வார விடுப்பு மாற்றி எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இதனால் ஓரிரு நாட்கள் கழித்து மாற்றி வார விடுப்பு எடுக்கும் போது சக போலீசாருக்கான வார விடுப்பு நாளாக இருந்தால் மற்றொரு நாளை வார விடுப்பாக எடுக்க வேண்டிய நிலை நீடிக்கிறது. அரசின் அனைத்துத்துறை அலுவலக பணிகளும் கணினிமயமாகியும் போலீசாரின் வார விடுப்பு மட்டும் நோட்டு பதிவில் இருப்பதால் வார விடுப்பு எடுப்பதில் குழப்பம் நீடிக்கிறது.

இதை போக்க விருதுநகர் மாவட்ட போலீஸ் நிர்வாகம் வார விடுப்புக்கான க்யூ.ஆர்., கோடு செயலியை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் ஒப்புதல் வழங்கும் இன்ஸ்பெக்டர்களும், க்யூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்து யாருக்கு விடுப்பு வேண்டும், தேவையான நாளில் எத்தனை பேர் பணியில் இருப்பார்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கண்காணித்து எளிதாக முடிவுகள் எடுக்க முடியும்.

எனவே விருதுநகர் மாவட்ட போலீசாருக்கு வார விடுப்புக்கான க்யூ.ஆர்., கோடு செயலியை உருவாக்கி நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us