ADDED : ஏப் 18, 2026 07:52 PM
வத்திராயிருப்பு;வத்திராயிருப்பில் சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடந்தது.
நேற்று மாலை 6:00 மணிக்கு வத்திராயிருப்பு பஸ் ஸ்டாண்டில் இருந்து டி.எஸ்.பி பாலச்சந்திரன் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
ஸ்ரீவில்லிபுத்துார் சப் டிவிஷன் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்று முத்தாலம்மன் பஜார், மேலப்பாளையம் உட்பட பல்வேறு வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
*சேத்துாரில் குஜராத் ஆயுதப்படை போலீசார், ராஜபாளையம் சப் டிவிஷன் போலீசார் என 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கொடி அணிவிப்பு நடந்தது.
தளவாய்புரம் மெயின் ரோடு, சேத்துார் முக்கிய வீதிகள் வழியாக கொடி அணி வகுப்பு நடந்தது.
தளவாய்புரம் மெயின் ரோட்டில் டி.எஸ்.பி., பஸினா பீவி கொடி அசைத்து துவக்கினார். இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தி, ரமேஷ் கண்ணன், ராஜேஷ் துப்பாக்கி ஏந்திய போலீசார் தளவாய் புரத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சேத்துார் முக்கிய வீதிகள் வழியாக போலீஸ் ஸ்டேஷன் அருகே அணி வகுப்பு முடிந்தது.
