பட்டாசு பறிமுதல்: 3 பேர் கைது
சாத்துார்: வெம்பக்கோட்டை விஜய கரிசல் குளத்தை சேர்ந்தவர் குருநாதன் 37. வீட்டிற்கு அருகில் தகர செட்டில் சரவெடி தயாரித்தார். தாயில்பட்டி கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் ரோஜா 57. வீட்டின் அருகில் தகர செட்டில் வெடி தயாரித்தார். ஏழாயிரம் பண்ணை அன்பின் நகரத்தை சேர்ந்தவர் ஜெயக் கனி 69.அரசு அனுமதி இன்றி இவரது வீட்டின் அருகில் சில்லு ஓலை ரக பட்டாசை விற்பனைக்காக வைத்திருந்தார். இவர்களிடம் இருந்து போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.
பட்டாசுடன் வாகனம் பறிமுதல்; கைது 1
சாத்துார்: வெம்பக்கோட்டை மடத்துப்பட்டி விலக்கில் லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில், அரசு அனுமதி இன்றி பேன்சி ரக பட்டாசுகள் கொண்டு செல்லப்படுவது தெரிந்தது. லோடு ஆட்டோவுடன் பட்டாசை போலீசார் பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த சிவகாசி மாரனேரியைச் சேர்ந்த டிரைவர் சிரஞ்சீவி 21, யை கைது செய்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.