டூவீலர்கள் மோதல் வாலிபர் கைது
விருதுநகர்: லட்சுமி நகரைச் சேர்ந்தவர்பிரகாஷ் 28. இவர் ஜன. 13ல் டூவீலரில்சிவகாசி-விருதுநகர் ரோட்டில் ஆமத்துார் அருகே சென்றார். அப்போது பின்னால் டூவீலர் ஓட்டி வந்த ஆமத்துாரைச் சேர்ந்த கார்த்திக் 25, பிரகாஷ் மீது மோதியதில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆமத்துார் போலீசார் கார்த்திக் கைது செய்தனர்.
பட்டாசு திரி பதுக்கியவர் கைது
விருதுநகர்: ஒண்டிப்புலி நாயக்கனுாரைச் சேர்ந்தவர் சிவமுருகன் 39. இவர் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப் பயன்படும் 11 குரோஸ் மிஷின் திரிகளை பதுக்கி வைத்திருந்தார். இவரை ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.
வாலிபர் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் கருப்பசாமியை 30, கொலை செய்த வழக்கில் 17 வயது சிறுவன், செந்தில்குமார் 24, லோகேஷ்22, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ராஜபாளையம் மங்காபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி டி.வி. மெக்கானிக். திருமணம் ஆகவில்லை. ராஜபாளையம் மாரியம்மன் கோயில் விழா திடல் அருகே நேற்று முன்தினம் இரவு நடந்த தகராறில் அடித்து கொல்லப்பட்டார். குற்றவாளியை கண்டுபிடிக்க கோரி அவரது உறவினர்கள் சாலைமறியல் செய்த நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் மங்காபுரத்தை சேர்ந்த 17வயது சிறுவன், ஆண்டத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் 24, லோகேஷ் 22, ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பரத்குமார் 19, டிராக்டர் டிரைவர். இவர் லோடு இறக்கிவிட்டு வளைவில் திருப்பியபோது டிராக்டர் கவிழ்ந்து அடியில் சிக்கி இறந்தார். கீழராஜகுலராமன் போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளி பலி
சிவகாசி: சிவகாசி சுக்கிரவார்பட்டி கலுங்கோடையைச் சேர்ந்தவர் ஜெயம் 59. கூலி வேலை செய்யும் இவர் சுக்கிரவார்பட்டி ரோட்டில் சைக்கிளில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.